தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகின்றோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். அதேசமயம் பள்ளி திறப்பு குறித்த முடிவில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார்போல் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.