50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்..
செப்டம்பர் 1-ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் அனைத்தும் திறக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாகவும், தியேட்டர்கள் திறப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது..
இந்நிலையில் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. திரையரங்குகளை பொருத்தவரை மே மாதம் 10ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டிருக்கிறது..