செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்..
இந்நிலையில் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டய படிப்பு கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளில் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டாயம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..