Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 239 நபர்கள்…. தீவிர கண்காணிப்பு…. காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை….!!

குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 144 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் 58 நபர்களை நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் மொத்தமாக 36 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 239 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பின்னர் அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது பற்றி தெரிய வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். பிறகு குற்றங்களை தடுக்கவும் மற்றும் அதனை கண்டறியவும் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் மூலமாக பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு துன்புறுத்துவதையும், நில ஆக்கிரமிப்பு என பல விஷயங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவி புரியும் என காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்ற மற்ற ரவுடிகளையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் காவல்துறையினர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை காப்பாற்றப்படும் என காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |