Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 23 முதல்…. “திரையரங்குகளை திறக்கலாம்”… வெளியான அறிவிப்பு..!!

ஆகஸ்ட் 23 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் மேலும் நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்..

இந்த ஆலோசனையின் முடிவில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. அதில், செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும், பட்டய  படிப்பு கல்லூரிகளும் 50% மாணாக்கர்களுடன் சுழற்சி முறையில் நடத்த அனுமதி.

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆகஸ்டு 23 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம்.. இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆக.23 முதல் இரவு 10மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது..

Categories

Tech |