ஆப்கானிஸ்தானில் ஒரு பெற்றோர், தலிபான்களுக்கு பயந்து தங்களின் இளம் வயது பெண்கள் 5 பேரையும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் Hazara இனத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் 5 மகள்களையும் வெளி நாட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதாவது, Hazara இனத்தைச் சேர்ந்த மக்களை பிற இனத்தவர்கள் கொடுமைப்படுத்துவது வழக்கமாக நடைபெறுகிறதாம். தற்போது நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால், தங்கள் மகள்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று பயந்து அமெரிக்க நாட்டிற்கு தப்பி செல்லுமாறு காபூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மேலும், அவர்கள் இருந்த குடியிருப்பை, இதற்கு முன்பே தலிபான்கள் தீ வைத்து கொளுத்தி விட்டார்களாம். இதனிடையே, தலீபான்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று திருமணமாகாத பெண்களை கடத்தி செல்ல தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகவும் பயந்த பெற்றோர்கள், தங்கள் மகனான Nader (25)-உடன் Hafizah (23), இரட்டையர்கள் Hawa, Latifa (20), Aaina Sheikh (19), மற்றும் Marjaan (18) ஆகிய 5 பிள்ளைகளை அனுப்பிருக்கிறார்கள்.
6 பேரும் காபூல் விமான நிலையத்தில் பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள்..