தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தியேட்டர்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆகஸ்ட 23ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை செயல்பட அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.