Categories
மாநில செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு எப்போது…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனைக்குப் பின் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 1 முதல் மதிய உணவிற்காக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்படலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |