தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட்-23 முதல் ஐடி நிறுவனங்கள் 100% செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.