Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுவருக்கு கிடைத்த அபூர்வ கல்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

கோவில் குளத்தில் மிதக்கும் அதிசய கல் சிறுவர் ஒருவருக்குக் கிடைத்தால் அதை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒக்கப்பிறந்தான் கோவிலில் குளத்திலிருந்து மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கிடைத்துள்ளது. இதனை பற்றி தொழிலாளி ஒருவர் கூறும் போது அவரின் சகோதரி மகன் ஒருவர் கல் ஒன்றை ஆணியால் செதுக்கிக் செதுக்கி‌ கொண்டிருந்திருக்கிறான். அப்போது அவரிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் எனக் கேட்ட போது ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் கல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. பின்னர் அந்த கல்லில் சிவலிங்கம் செய்கிறேன் என கூறியுள்ளார். அதன்பின் அந்த கல்லை எங்கள் வீட்டுத் தண்ணீர் தொட்டியில் போட்ட போது அது மூழ்காமல் மிதந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் தண்ணீரில் மிதக்கின்ற அதிசய கல்லை அதிசயத்துடன் பார்த்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்கியது இல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். அதனால் இந்த கல்லும் அது கூட சேர்ந்த கல்லாக இருக்கலாம் என்பதினால் அரசு அருங்காட்சியகத்தில் இதை ஒப்படைக்க இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் இது பவளப் பாறை வகையைச் சார்ந்த என கூறியுள்ளார். இந்த வகையான பவளபாறைகள் கல்லில் மட்டுமே காணப்படும் எனவும், இது போன்ற கற்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் இருக்கிறது. இந்த அரிய வகையான காணப்படும் இந்த கல்லை யாராவது இங்கு கொண்டு வந்து கோயில் குளத்தில் போட்டிருக்கலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் உமா சங்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |