ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பிய ஜனாதிபதி அஷ்ரப் கனியின் சகோதரர் தலிபான்களுடன் இணைந்த அதிகாரபூர்வ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கடந்த 15ம் தேதி அன்று தலிபான்கள் சூழ்ந்துகொண்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதியான, அஷ்ரப் கனி தன் குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து தப்பி விட்டார். சில நாட்கள் கழித்த பின்பே, தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டார்.
மேலும், நாட்டிற்கு மீண்டும் திரும்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியிருந்தார். இதனிடையே தலிபான்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அஷ்ரப் கனியின், சகோதரரான Hashmat Ghani Ahmadzai என்பவர் தலீபான்களுடன் இணைந்துள்ளார்.
#Afghanishtan: Former President #AshrafGhani brother "Hashmat Ghani Ahmadzai" announces support for Taliban & officially part of the Taliban. pic.twitter.com/tpz8WNkmbq
— Nikhil Choudhary (@NikhilCh_) August 21, 2021
Kuchis கிராண்ட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் இவர், தலிபான்களின் தலைவரான Khalil-ur-Rehman மற்றும் மதகுரு Mufti Mahmood Zakir போன்றோர் முன்னிலையில் தலிபான் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.