பிரிட்டனில் இரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் ஒரு நபர், பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின், கிரேட் மான்செஸ்டரில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:40 மணிக்கு மூன்று இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது, ஒரு நபர் அவர்களின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அதன்பின்பு அவர்களிடம் பாலியல் ரீதியாக முகம் சுழிக்க வைக்கும் படி பேசியிருக்கிறார்.
மேலும், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இந்நிலையில், தற்போது காவல்துறையினர் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் பொதுமக்களிடம், அந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.