சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது சீனு ராமசாமி நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
My beloved Realistic Hero @Vineeth_Sree sir
Thanks for coming & made us to float in your voice,
Given wonderful melody in @NRRaghunanthan musical penned by @Vairamuthu for #Idimuzhakkam movie produced by @SkymanFilms @Kalaimagan20 Starring @gvprakash @SGayathrie @Vetrikumaran7 pic.twitter.com/1X1oABGeTA— Seenu Ramasamy (@seenuramasamy) August 21, 2021
ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடிமுழக்கம் படத்தில் பிரபல மலையாள நடிகரும், பாடகருமான வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் இந்த படத்தில் ஒரு அழகிய மெலடி பாடலை பாடி இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.