Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு… ஆட்சியரின் அதிரடி உத்தரவு… குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் மீது கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளதால் தர்மராஜன் மற்றும் காளிரஜை குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட ஆட்சியருக்கு சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் பரிந்துரை செய்துள்ளார். அதனை பரிந்துரை செய்த ஆட்சியர் சந்திரகலா தர்மராஜ் மற்றும் காளிராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவிட்டுள்ளார். மேலும் பேரையூர் காவல்துறையினர் அவர்கள் 2 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |