மளிகை கடை உரிமையாளர் வீட்டில் நுழைந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அதை வனபகுதியில் விட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள ஒருகால் பாதை தெருவில் வீரராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அங்கு சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த வீரராம்குமார் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் அங்கு இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனபகுதியில் விட்டுள்ளனர்.