தமிழகத்தில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்து அதற்கான பணி நியமன ஆணையும் வழங்கினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு திமுகவிற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயர் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவில்களில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் உள்ளது என தெரிவித்தார். இவர் தான் “எங்களுக்கு சோடா குடிக்கவும் தெரியும். சோடாபாட்டில் வீசவும் தெரியும்” என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.