Categories
சினிமா தமிழ் சினிமா

ஓணம் கொண்டாடிய பிரபல பாடகி…. சூப்பர் சிங்கரின் நடுவர்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!

பிரபல பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன் தனது மகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஆகும். இதற்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. தற்பொழுது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது. இதில் பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் போன்றோர்  நடுவராக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர்.

Gallery

இதற்கிடையில் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன். இவர் தன்னுடைய மயக்கும் குரலால் பல பாடல்களை பாடியுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் சீசனில் ஒரு சில எபிசோடுகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாடகி ஸ்வேதா மோகன் அவரின் மகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |