இங்கிலாந்திலுள்ள உலகிலேயே மிகப்பெரிய லாட்டரி நிறுவனமான யூரோ மில்லியன்சில் ஒரே நாளில் சுமார் 25 மில்லியன் யூரோக்களை அடிப்படையாகக் கொண்டு குலுக்கள் முறை நடைபெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய லாட்டரி நிறுவனமாக இங்கிலாந்திலுள்ள யூரோ மில்லியன் ஜாக்பாட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நபரொருவர் சுமார் 161 மில்லியன் யூரோக்களை வென்று வீடு மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார்.
அதேபோல் இந்த யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு இரண்டு பேர் சும்மா 148 மில்லியன் யூரோக்களை வென்று மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார்கள். இதேபோல் இன்னும் 3 பேர் பல மில்லியன் யூரோக்களை இந்த யூரோ மில்லியன் ஜாக்பாட்டின் மூலம் வென்றுள்ளார்கள். இந்நிலையில் இந்த யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் ஒரே நாளில் 25 மில்லியன் யூரோக்களை அடிப்படையாகக்கொண்டு குலுக்கல் முறை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.