தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். சென்னையை பொறுத்தவரை டோக்கன் வாங்கி வரிசையில் நின்று காத்திருந்து தான் தடுப்பூசி போட வேண்டும். இதனால் முதியவர்களுக்கு சிரமாக இருக்கிறது.
இந்நிலையில் வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக 044-2538 4520, 044-46122300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும் குடிசைப்பகுதி மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.