Categories
அரசியல் மாநில செய்திகள்

சிதம்பரத்த வெளிய எடுங்க …. என்ன உள்ள போடுங்க ….. போராடுங்க ….. பின்வாங்க மாட்டேன் …. சீமான் கருத்து …!!

ராஜிவ் காந்தி குறித்து பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் சென்னையில் அவரின் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.மேலும் இதுதொடர்பாக சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் , காங்கிரஸ் கட்சி சிதம்பரத்தை வெளியே எடுக்க போராடுறாங்க , என்னை உள்ள தள்ள  போராடுறாங்க. காங்கிரஸ் போராடுறது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பேசியதை திரும்ப பெற மாட்டேன் , வழக்க்கு வர தான் செய்யும் அதை சட்டப்படி சந்திப்போம்.  எங்கள் இனத்தின் தலைவனை நாங்கள் முன்னேறுத்துவோம். காந்தியின் பார்வையில் சுபாஷ் சந்திரபோஸ் , பகத்சிங் தீவிரவாதிகள் தான். ஒருநாள் எங்கள் பிரபாகரனின் படத்தை தோளில் , நெஞ்சில் வரைந்து கொண்டு சட்டமன்றம் , பாராளுமன்றம் செல்லும் காலம் வரும் என்று சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |