பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.சி.எப் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ், ஹரிஷ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சார்லசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சக காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சார்லஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பணியில் இருக்கும்போதே சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.