விவசாய தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனவிலங்குகள் பாதுகாப்புக் குழுவினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தாத்தூரில் சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது புதருக்குள் இருந்து மலைப்பாம்பு வெளியே வருவதை பார்த்து அலறியடித்து ஓடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் சசிகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பத்குமார் அளித்த தகவலின் படி வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த மீட்புபணியாளர் வினோத்குமாரின் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழுவினர் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.