Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக விஜய் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மடப்புரம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென விஜயின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது.

இதனை அடுத்து படுகாயமடைந்த விஜயை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |