சகோதரத்துவத்தை கவுரவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையான ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தான் சகோதரன் என கருதுவோருக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி எனும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது வழக்கமாகும். இதை ஏற்றுக்கொண்ட சகோதரன், சகோதரியின் பாதுகாப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாக பொருள். அதன்படி இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் முயற்சியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பெண்களின் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றி கொள்ள கூடிய வகையிலான ஒரு இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதில் பங்களிப்பை செய்வதற்கு இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.