Categories
உலக செய்திகள்

குழந்தையின் உயிர் தான் முக்கியம்..! போலந்து வீராங்கனையின் தன்னிகரற்ற செயல்… இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!!

போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்காக விற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் போலந்து நாட்டு வீராங்கனை மரியா மாக்டலினா (25) . இந்த வீராங்கனை சென்ற வாரம் தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளி பதக்கத்தை விற்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 8 மாத குழந்தை ஒன்றின் இதய அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மரியாவின் வெள்ளி பதக்கத்திற்கு Zabka என்ற பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனம் 125,000 டாலர் வழங்கியுள்ளது. ஆனால் மரியாவின் பதக்கத்தை அவரே வைத்துக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் கூறியது. அதேசமயம் Zabka நிறுவனம் மரியாவின் இந்த உன்னதமான செயலை பாராட்டி பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இணையத்தில் பலரும் மரியாவின் நெகிழ வைக்கும் செயலினை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |