15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் பள்ளக்கனியூர் கிராமத்தில் சென்னை பகுதியில் வசிக்கும் ஒருவரின் பங்களா அமைந்திருக்கிறது. அதை மனோஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் பங்களாவில் கூண்டுகள் வைத்து 20-க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். அப்போது சமையலறையில் உள்ளே சென்ற போது 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சுவரில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி விரைந்து சென்ற வனத்துறையினர் ஒரு மணிநேரம் போராடிய பிறகு சமையல் அறையின் உள்ளே இருந்த 15 அடி நீள மலைப்பாம்பை மீட்டுள்ளனர். இதனையடுத்து கிரிமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்து சென்று அப்பாம்பை விட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மலைப்பாம்பு கோழியை விழுங்க வந்திருக்கும் பின் கூண்டுக்குள் செல்ல முடியாததால் பங்களாவுக்குள் வந்து இருக்க வாய்ப்புள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.