தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.