Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகர மக்களுக்கு…. #MadrasDay வாழ்த்து சொல்லி ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 382 ஆவது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, மெரினா, கன்னிமாரா நூலகம் என கட்டிடங்கள் சென்னையின் அடையாளமாக திகழ்கின்றன. எல்லா சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட சென்னையின் அழகையும், அமைதியையும் பேணிக்காக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், சீர்மிகு, சிங்கார -வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்கு பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்கு பங்களித்தது திமுக அரசு. இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு #Madras Day வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |