Categories
உலக செய்திகள்

யார் அந்த மர்ம நபர்….? பெண்ணுக்கு நேர்ந்த வீபரீதம்…. தேடுதல் வேட்டையில் போலீசார்….!!

சாலையோரம் நின்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷைர் கவுன்டியில் இருக்கும் தாட்சம் பகுதியில் A4 நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை 12.15 மணியளவில் பெண் ஒருவர் Cox’s Lane சந்திப்பை கடந்துள்ளார். அப்போது அந்த வழியில் ஓரமாக வாகனங்கள் நிற்கும் பகுதியில் குழந்தையை அமர வைக்கும் இருக்கை ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டதும் அவர் ஏதோ விபத்து நிகழ்ந்துள்ளது என்று காரை நிறுத்தி விட்டு அதன் அருகில் சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு எந்த குழந்தையுமில்லை.

அப்பொழுது திடீரென்று பின்னால் இருந்து ஒருவர் அந்த பெண்ணை தாக்கி அங்கேயே வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து போலீசாரிடம்  அப்பெண் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். குறிப்பாக அவரை பற்றிய தகவல்களை பாதிப்புக்குட்ப்பட்ட பெண்ணாலும் சரியாக  கூற இயலவில்லை.

மேலும் அந்த சாலையில் குழந்தைக்கான இருக்கை வேண்டுமென்றே அங்கு வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் போலீசார் அதிகமாக ஈடுபட்டு உள்ளனர். அதிலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சாலை ஓரத்தில் சந்தேகிக்கும் வகையில் ஏதேனும் இருந்தால் உடனே தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசாரை அழைக்கவும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |