Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப் போவது இவரா.? ரசிகர்கள் வருத்தம்…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரபல போட்டியாளர் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் அனைவரும் ரசிக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், எஸ்.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

மேலும் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இறுதிச்சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிரபல போட்டியாளர் KJ ஐயனார் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

Categories

Tech |