Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொடுக்க மறுத்த தாய்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி…!

பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் சாலையில் வைத்து தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்னேரிபட்டியில் நல்லம்மாள் என்ற மூதாட்டி கூலித்தொழில் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது நல்லமாளை அவரது மகன் சண்முகம், மருமகள் ஜானகி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணி ஆகியோர் வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் நல்லம்மாள் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சண்முகம் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அவரை தாக்கி சாலையில் இழுத்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் சண்முகத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து நல்லம்மாள் பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சண்முகத்தை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜானகி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோரை தேடி வருகின்றனர். இதனைதொடர்ந்து சண்முகம் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அவரை தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |