Categories
உலக செய்திகள்

‘ஆப்கானியர்கள் காப்பாற்றப்படுவார்கள்’…. விரைவில் அனுப்பப்படும் விமானங்கள்…. தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்….!!

ஆப்கானியர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை என்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ்  சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பாரிஸிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நான்காவது மீட்பு விமானமானது கடந்த வெள்ளிகிழமை மாலை அன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 4 பிரெஞ்சுக்காரர்கள் , 99 ஆப்கானியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு அரசு அல்லது அந்நாட்டு உதவிக்குழுவுடன்  பணிபுரிந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அதாவது கடந்த திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை காபூலில் இருந்து சுமார் 407 ஆப்கானியர்கள் உட்பட மொத்தம் 570 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி காபூல் விமான நிலையத்திற்கு அரசு சேவைகளை பிரான்ஸ் தூதரகம் மாற்றியுள்ளது. மேலும்  புதிய விமானங்களை அனுப்புவதற்காக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த திங்கட்கிழமை அன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “பிரான்ஸ் நாட்டுக்காக உழைத்த ஆப்கானியர்கள் காப்பாற்றப்படுவார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு அஞ்சி  இருக்கும் செய்தியாளர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோரை பாதுகாக்க தீவிர முயற்சி எடுப்போம்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |