Categories
உலக செய்திகள்

“20 வருடத்தில் தலீபான்கள் மாறவே இல்லை!”.. சொல்லவே வருத்தமாக இருக்கிறது.. பெண்கள் வெளியிட்ட வீடியோ..!!

ஆப்கானிஸ்தானில் இளம்பெண்கள் இருவர் பணிக்கு சென்றபோது தலிபான்கள் அந்த பெண்களை திருப்பியனுப்பியது மட்டுமன்றி, அவர்களை வருத்தமடைய செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது.

தலிபான்கள், காபூல் நகரை கைப்பற்றி நாடு முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். அதன்பின்பு நாட்டு பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்று தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளது. அதாவது, இளம்பெண்கள் இருவர் வேலைக்கு சென்ற போது தலிபான்களால் ஏற்பட்ட நிலையை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு இருக்கிறோம். பணியாளர்கள் பணிக்கு செல்லலாம் என்று தலிபான்கள் தெரிவித்ததால், வேலைக்கு செல்ல முயற்சித்தோம். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை உங்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறினர்.

அது மட்டுமல்லாமல், அவர்கள் நேரடியாக எங்களிடம் இதனைக் கூறவில்லை. அந்த வழியே சென்ற ஒரு நபரை அழைத்து எங்களிடம் கூற சொன்னார்கள். நேரடியாக எங்களிடம் கூறுங்கள் என்று கேட்டதற்கு, உங்களை பார்க்க முடியாது என்று கூறிவிட்டனர். நாங்கள் பர்தா அணிந்திருந்தோம். அப்படி இருந்தும் இவ்வாறு கூறினார்கள்.

இதனை சொல்லவே, வருத்தமாக இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னால் நாங்கள் பார்த்த தலீபான்கள் தற்போது வரை, அப்படியே இருக்கிறார்கள். அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் வீட்டிலேயே இருந்துவிட வேண்டாம். நாம் அமைதியாகவே  இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |