கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளார்கள் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் அதனை பலப்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். இதனால் தலிபான்களுக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குமிடையே பகை உணர்வு வளர்ந்துள்ளது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள்காக சில வியாபாரிகள் நிதியை திரட்டியுள்ளார்கள். இவர்களை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். இதனால் கடுமையாக கோபமடைந்த தலிபான்கள் ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படையினர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான கோராசனியை கைது செய்து புலெ சர்கி என்னும் சிறையில் அடைத்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான கோராசனியை கடத்தி சென்று படுகொலை செய்துள்ளார்கள் என்னும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.