Categories
உலக செய்திகள்

மருத்துவ மாணவர்களின் அவல நிலை…. ஆதரவு அளிக்கும் தேசிய அமைப்பு…. எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்ணியவாதிகள்….!!

மருத்துவ படிப்பின் செலவிற்காக மாணவர்கள் பாலியல் தொழில் புரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 90% மருத்துவ மாணவர்கள் வேலையின்றி தங்களது படிப்பு செலவிற்காகவும் தினசரி வாழ்க்கை நடத்துவதற்காகவும் பாலியல் தொழில் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை ஆதரிக்கவும், அங்கீகரிக்கவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் தங்களது அழைப்புகளை விடுத்துள்ளனர். இந்த பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக போராடும் தேசிய அமைப்பானது English Collective of Prostitutes.

இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான லாரா வாட்சன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கடந்த சில மாதங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த தொழிலை அவர்கள் மருத்துவ படிப்பின் செலவிற்காக மட்டுமே செய்கின்றனர். மேலும் இது பகுதி நேர வேலை வாய்ப்புகளின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் பாலியல் தொழிலில் ஈடுபடும் மாணவர்களை ஆதரிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு நிதி சேவைகள் வழங்க வேண்டும்.

இதற்காக அவர்களை தண்டிக்கவோ, படிப்பிலிருந்து வெளியேற்றவோ அல்லது தொழில் நடவடிக்கை செயல்பாடுகளை தடை செய்யவோ கூடாது” என கூறியுள்ளனர். இந்த கருத்திற்காக பல மருத்துவர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அமைப்பானது பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் விதமாகவுள்ளது. இதனை பெண்கள் செய்வது முறையற்ற காரியமாகும். குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |