வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாள் ஆட்டம் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது .
இதில் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய பவாத் ஆலம் 76 ரன்கள் எடுத்தபோது காயத்தால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது .மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.