ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய இராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய ராணுவம் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்திய அகாடமியை புதிய அரசிடம் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய இராணுவ வீரர்கள் 750 பேர் பெரும் இன்னலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பிரித்தானிய இராணுவ வீரர்கள் 454 பேர் ஆப்கானிஸ்தானில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 49 பேர் நோய்வாய்ப்பட்டு அல்லது விபத்தில் சிக்கி இறந்ததாகவும், 405 பேர் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.