Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலையில்லாமல் தவிப்பு…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்திய கவுண்டன்பட்டி பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லாததால் சின்னதுரை மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சின்னதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |