தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசு அளிக்கும் தளர்வுகளை பொதுமக்கள் முழு பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்த வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி பெருந்தொற்று நோய் பரவலைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.