சாண்ட்விச் தீவின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும், தெற்கு சான்விச் தீவு பகுதி மற்றும் தெற்கு ஜார்ஜியா பகுதியில் இன்று அதிகாலையில் சுமார் 12:45 மணிக்கு மிகுந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது 6.9 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பதாவது, இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்த விதமான சேதங்கள் ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.