இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள 100 பந்துகளை கொண்ட தி ஹன்ட்ரட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் சவுத்தன் பிரேவ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மொய்ன் அலி தலைமையிலான பர்மிங்காம் பீனிக்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சவுத்தன் பிரேவ் அணி , 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை குவித்தது. 169 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய பிர்மிங்காம் பீனிக்ஸ் அணியால் 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
அணி சார்பில் அதிகபடியாக லிவிங்ஸ்டன் 46 (19) ஓட்டங்கயைும், மொய்ன் அலி 36 (30) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். இதன் மூலம் 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற சவுத்தன் பிரேவ் அணி முதல் ‘தி ஹன்ட்ரட்’ ஆண்களுக்கான கிண்ணத்தை கைப்பற்றியது.இந்த போட்டி முடிவுகள் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.