தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.