தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும். பட்டியல் வகுப்பினர் பதிவு கட்டணம் இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணத்தை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.