வீட்டிற்கு அருகில் 5 மாத ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் விவசாயியான விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் 5 மாத ஆண் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 மாத ஆண் குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.