தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் செப்-6 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கின்றன.
நாங்கள் உட்பட திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் தடுப்பூசி எடுத்துக் கொண்டோம் என்பதை தெரிவிக்கும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்துகொள்ளும் திட்டமும் இருக்கிறது. மேலும் தியேட்டர்களில் ஏற்கனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.