எஸ்.பி.ஐ வங்கியில் ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பாட்டில் இருக்ககூடிய ஒரு கடன் வசதி தான் பென்சன் லோன் ஸ்கீம். எஸ்.பி.ஐ இந்த கடன் வசதியை 9.75% வட்டி விகித்ததுடன் வழங்குகிறது. பெற்றோர்கள் உங்கள் வாரிசுகளின் கனவினை நிறைவேற்றி கொள்ள இந்த கடன் திட்டம் பெரிதும் பயன்படும். இது மருத்துவ செலவுக்கும் பயன்படும்.
இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு நீங்கள் குறைந்தபட்ச ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். அதன் பிறகு நீங்கள் எஸ்.பி.ஐயின் (SBI) எந்தவொரு கிளையிலும் விண்ணப்பிக்க முடியும். இந்தப் பென்சன் லோனுக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களை பெற விரும்பினால், 1800-11-2211 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஓய்வூதியதாரர்களின் வயது 76 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும், இது தவிர, பென்சன் பேமெண்ட் ஆர்டர் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தால் போதும் நீங்கள் இந்த லோனினை பெற முடியும்.