குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள சேடப்பட்டி-ஆண்டிப்பட்டி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேதமடைந்த குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் குளம்போல தேங்கியுள்ளது.
இதனை அடுத்து நீண்ட நாட்களாக அப்பகுதியில் குடிநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.