தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி, பரிசோதனை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.