மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முருகேசன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் முருகேசனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான வெங்கடேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.