விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதையும் சிறப்பாக செய்ய முடியும்.
இன்று செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும் அக்கறையும் பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிக பணம் செலவு செய்ய நேரிடும். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கும். ஆனால் செய்யக்கூடிய செயலில் கொஞ்சம் ஞாபக மறதி இருப்பதினால் தடுமாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்ந்துவிடும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் தீர்ந்துவிடும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறிவிடும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேர்ந்துவிடும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதம் நீங்கிவிடும். எதையும் சிறப்பாக செய்ய முடியும்.
அதற்கான முயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். சில காரியங்களில் காலதாமதம் ஏற்படும். சில இடர்பாடுகள் ஏற்பட்டவுடன் மனம் வருத்தப்படும். அதனால் நீங்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் புரிந்து கொள்ளும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். காதலை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும். கல்வியின் செயல்பாடுகள் வியக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் பொது விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். கல்வியில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்